யூனோஸ் கிரசெண்ட் புளோக் 7ல் இருக்கும் ஒரு காப்பிக்கடையில், கையில் ஒரு வெட்டுக்கத்தியுடன் காணப்பட்ட 60 வயது ஆடவர் ஒருவரை போலிஸ் அதிகாரிகள் கைதுசெய்தனர். அந்த ஆடவர், சுமார் 10 போலிஸ் அதிகாரிகள் சூழ்ந்திருந்த நிலையில் சத்தம்போட்டதைக் காட்டும் காணொளி இணையத்தில் பதிவேற்றப்பட்டது. பொது இடத்தில் ஆபத்தான ஆயுதத்தை வைத்திருந்ததற்காக அந்த ஆடவர் கைதுசெய்யப்பட்டார். போலிஸ் புலன்விசாரணை தொடர்கிறது.
வெட்டுக்கத்தியுடன் ஆடவர் கைது
1 mins read

