சிங்கப்பூர் முழுவதும் நேற்று கடும் மழை பெய்தது. வழக்கத்திற்கு மாறாக பலத்த காற்று வீசியது. மின்னல் வெட்டியது. ஈஸ்ட் கோஸ்ட் பார்க் கடற்கரையில் சில படகுகள் தூக்கி வீசப்பட்டன. பலத்த காற்று காரணமாக மரக்கிளைகளும் இலை களும் காற்றில் பறந்ததைக் காட்டும் காணொளிகள் இணையத்தில் பதிவேற்றப்பட்டன. மூன்று படகுகள் காற்றில் வீசப்பட்டது தெரிந்தது. காணொளியை எடுத் தவர் அந்தப் படகுகள் தன்னை நோக்கிப் பறந்து வந்த தைக் கண்டு பயந்துபோய் ஓடிவிட்டார்.
ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில் பலத்த காற்றில் ஒரு பெரிய குப் பைத்தொட்டி பறந்ததைக் காட்டும் வேறொரு காணொளியை வாசகர் ஒருவர் அனுப்பியிருந்ததாக ஸ்ட் ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது. கடும் மழை, காற்றையடுத்து பொதுப் பயனீட்டுக் கழகம் தெம்பனிஸ் ரோடு, ஆறுமுகம் ரோடு ஆகிய இரண்டு இடங்களில் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று பொதுமக்களை எச்சரித்தது.
நேற்று மாலை 5.30 மணி முதல் 7.30 வரை நாடு முழுவதும் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படு வதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தன் இணையத் தளத்தில் குறிப்பிட்டிருந்தது. சிங்கப்பூரில் இப்போது வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இது மார்ச் மாதம் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த படகுகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. படம்: யுடியூப்

