ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி: சிறார் மேம்பாட்டுக் கணக்குகள் அக்டோபரில் முடிவடையும்

1 mins read

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் தங்களின் 12 வயதுக்கும் குறைந்த பிள்ளைகளுக்காக சிறார் மேம்பாட்டுக் கணக்கு வைத்திருக்கும் பெற்றோர்கள், அக்டோபர் மாதம் முடிவதற்குள் அந்தக் கணக்கை வேறு வங்கிக ளுக்கு மாற்றிக்கொள்ள வேண் டும். ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் இருக்கும் இத்தகைய கணக்குகள் வரும் அக்டோபர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்து விடும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

பெற்றோர்கள் தங்கள் பிள் ளைகளுக்கான கணக்கை, இந்த அமைச்சு அங்கீகரித்துள்ள எந்த வங்கிக்கு வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். டிபிஎஸ் வங்கி, யுஓபி, ஓசிபிசி ஆகியவை அமைச்சு அங்கீகரித்துள்ள வங்கிகளாகும். அக்டோபர் 31ஆம் தேதிக் குள் கணக்குகளை மாற்றவில்லை என்றால் அமைச்சு இந்த வங்கிகளில் ஏதாவது ஒரு வங்கிக்குத் தானே கணக்குகளை மாற்றி விடும்.