மதிநுட்பச் சொத்துத் துறையில் 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர்' கல்வி விருதுகள்

மதிநுட்பச் சொத்துத் துறையில் 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர்' கல்வி விருதுகள்

1 mins read

சிங்கப்பூரர்கள் இப்போது மதி நுட்பச் சொத்துத் துறையில் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சி பெறு வதற்கான உதவித் தொகையைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க முடி யும். சிங்கப்பூர் மதிநுட்பச் சொத்து அலுவலகம் நேற்று இதனை அறிவித்தது. ஸ்கில்ஸ்ஃபியூச்சர் கல்வி விருதுகைள 60 பேர் வரை பெறலாம். இது மதிநுட்பச் சொத்துத் துறை தேர்ச்சிகளைப் பெற அல்லது அவற்றை மேம் படுத்திக்கொள்ள விரும்பும் நிபு ணர்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

ஒவ்வொருவருக்கும் $5,000 வரை உதவி கிடைக்கும். இதில் உடன்பாட்டு நிபந்தனை எதுவும் இராது. புத்தாக்கத்தை மையமாகக் கொண்ட பொருளியலுக்கு ஊழி யர்கள் கைகொடுப்பதற்கு ஏது வாக இந்தக் கல்வி விருதுகள் உதவும் என அதை நிர்வகிக்கும் சிங்கப்பூர் மதிநுட்பச் சொத்து அலுவலகம் விவரித்தது. மதிநுட்பச் சொத்து தொடர் பான தொழில்நுட்ப அறிவுடைய நிபுணர்கள் மட்டுமல்லாது, நிபு ணர்கள் கொண்ட ஒரு சமூகத் தையே உருவாக்குவதுதான் இந்த அலுவலகத்தின் நோக்கம்.

"இந்த நிபுணர்கள் நிறுவனங் களின் வர்த்தக வளர்ச்சியைப் பெருக்குவதற்கு உதவும் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள்," என்று கூறினார் சிங்கப்பூர் மதி நுட்பச் சொத்து அலுவலகத்தின் தலைமை நிர்வாகி திரு டேரன் டெங்.