விருந்தோம்பல் தொழில்துறை யைச் சேர்ந்த ஊழியர்களுக்கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் பிடிக்கும் குறுகியகால பயிற்சி செயல்திட்டம் இப்போது நடப்பில் இருக்கிறது. வேலை பார்க்கும்போதே தங் கள் தேர்ச்சியை இந்த ஊழியர்கள் மேம்படுத்திக்கொள்ள இந்தத் திட்டம் வகை செய்கிறது. வேலை நேரம் கெடாமல் ஊழி யர்களுக்குப் பயிற்சி அளிக்கும் இந்தத் திட்டம் ஊழியர் பற்றாக் குறையை எதிர்நோக்கும் இந்தத் தொழில்துறைக்கு மிகவும் உதவி யாக இருக்கிறது.
தேசிய தொழிற்சங்கக் காங் கிரசின் விருந்தோம்பல் மற்றும் பயனீட்டாளர் தொழில் குழுமத்திற் கும் இந்தத் தொழில்துறையைச் சேர்ந்த 22 நிறுவனங்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள உடன் பாட்டின் ஒரு பகுதியாக இந்தப் பயிற்சி இடம்பெறுகிறது. இந்தச் செயல்திட்டம் 'விருந் தோம்பல் ஏபிசி கட்டமைப்பு' என்று குறிப்பிடப்படுகிறது. இது நேற்று தொடங்கப்பட்டது.
ஹோட்டல் மற்றும் தங்குமிட சேவைகள், மனமகிழ் மன்றங்கள், விடுமுறை உல்லாச இடங்கள் போன்ற துறைகளில் ஊழியர் களிடம் பற்றாக்குறையாக இருக் கும் தேர்ச்சிகளை அவர்களுக்கு இந்தச் செயல்திட்டம் போதிக் கிறது.
தலைமைத்துவம், நிர்வாகம், மின்னிலக்கத் தொழில்நுட்பம், செயல்முறைகள் போன்றவற்றை உள்ளடக்கும் பயிற்சியை இந்தக் கட்டமைப்புத் திட்டம் ஊழியர் களுக்கு வழங்குகிறது.
இதில் கலந்துகொள்பவர்கள் இணையம் வழியாக அல்லது நேரடியாக அல்லது பயிற்சி வகுப்புகளின் மூலம் பங்கெடுத்துக்கொள்ளலாம்.

