வெளிநாடுகளில் வாய்ப்புப் பெற சட்ட நிறுவனங்களுக்கு உதவும் புதிய திட்டம்

வெளிநாடுகளில் வாய்ப்புப் பெற சட்ட நிறுவனங்களுக்கு உதவும் புதிய திட்டம்

1 mins read

புதிய கட்டமைப்பு வாய்ப்புகளைத் தேடும், வெளிநாட்டில் தொழில் செய்ய விரும்பும் வழக்கறிஞர்களும் சட்ட நிறுவனங்களும் இனி புதிய தொரு திட்டத்தை நாடலாம். 'லாயர்ஸ் கோ குளோபல்' என்னும் அந்தத் திட்டத்தை சட்ட அமைச்சு, சிங்கப்பூர் சட்டக் கழகம், ஐஇ சிங்கப்பூர் ஆகியன இணைந்து உருவாக்கி உள்ளன. சிறிய, நடுத்தர சட்ட நிறுவனங் களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ள இத்திட்டம், இங் குள்ள வழக்கறிஞர்கள் வெளி நாட்டுப் பயணங்களை மேற் கொள்ளவும் வெளிநாடுகளில் பயிற்சி பெறவும் கைகொடுக்கும்.

தனிச்சிறப்பு மிக்க நிபுணத் துவம் இருந்தபோதிலும் வெளி நாட்டு வாய்ப்புகளைப் பெற போது மான வளம் இல்லாத நிறுவனங் களுக்கு இத்திட்டம் உதவும். மேலும், ஏற்கெனவே வெளி நாட்டில் தொழில் செய்து வரும் நிறுவனங்கள் தங்களது கட்ட மைப்பை விரிவுபடுத்தவும் தாங் கள் தொழில் புரிந்துவரும் சந்தை யின் நிலவரத்தை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கும் திட்டம் உறுதுணை புரியும் என சட்ட அமைச்சு தெரிவித்துள்ளது.