மின்சார, மின்னணுப் பொருட்கள் முறையாக மறுபயனீடும் மறுசுழற் சியும் செய்யப்படுகின்றனவா என் பதை உறுதி செய்வதற்கான விதி முறைகளை அரசாங்கம் அறிமுகம் செய்யவிருப்பதாக சுற்றுப்புற, நீர் வள அமைச்சர் மசகோஸ் ஸுல் கிஃப்லி தெரிவித்துள்ளார். அதற்காக இபிஆர் என்னும் அணுகுமுறையை அரசாங்கம் பின்பற்றும்.
மின்னணு பொருட்களை சிங் கப்பூரில் விற்போரும் இறக்குமதி செய்வோரும் அவற்றை சேகரித்து முறையாக மறுசுழற்சி செய்ய இபிஆர் கேட்டுக்கொள்ளும். அவ்வாறு மறுசுழற்சி செய்ய இயலாமற்போனால் அப்பொருட் களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். அதற்காக தயாரிப்பாளர்க ளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படும் என்றும் இலக்கை அடைய ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இபிஆர் அணுகுமுறை ஏற் கெனவே சுவீடன் போன்ற நாடு களில் கடைப்பிடிக்கப்படுகிறது. 52 விழுக்காட்டு மின் கழிவுகளை சுவீடனும் 43 விழுக்காட்டு மின் கழிவுகளை டென்மார்க்கும் மறு சுழற்சி செய்கின்றன.

