சிட்டி ஹார்வெஸ்ட் தேவாலய வழக்கு: அரசுத்தரப்பு மனு நிராகரிப்பு

சிட்டி ஹார்வெஸ்ட் தேவாலய வழக்கு: அரசுத்தரப்பு மனு நிராகரிப்பு

2 mins read
f3b4b3a9-0d88-426d-89b9-964d4d8ad0a8
-

சிட்டி ஹார்வெஸ்ட் தேவாலய வழக் கில் தேவாலயத்தைத் தோற்றுவித்த கொங் ஹீக்கும் மேலும் ஐவருக்கும் பல மில்லியன் வெள்ளி தேவாலய நிதியை மோசடி செய்ததற்காக முதன்முதலில் விதிக்கப்பட்ட தண் டனையை மீண்டும் விதிக்குமாறு அரசாங்கத்தரப்பு வழக்கறிஞர்கள் செய்த விண்ணப்பத்தை ஐந்து நீதிபதிகள் கொண்ட மேல்முறை யீட்டு நீதிமன்றம் நேற்று நிரா கரித்தது.

அரசாங்கத் தரப்பு விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டிருந்தால் குற்றவாளிகளின் சிறைத் தண் டனை கூடியிருக்கும். ஆனால், மேல்முறையீட்டு நீதி மன்றம் கோரிக்கையை ஏற்காததால் 53 வயது கொங், மூத்த துணை பாதிரியாரான 45 வயது டான் யி பெங், முன்னாள் நிதி மேலாளரான 41 வயது செரினா வீ, முன்னாள் நிதிக் குழு உறுப்பினரான 50 வயது ஜான் லாம் ஆகிய நால்வரும் தற்போது அனுபவித்து வரும் குறைக்கப்பட்ட தண்டனையான ஒன்றரை ஆண்டுகள் முதல் மூன் றரை ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையைத் தொடர்ந்து நிறைவேற்றுவார்கள். அவர்கள் அனைவரும் சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் தண்ட னையை நிறைவேற்றத் தொடங்கி னார்கள்.

முன்னாள் நிதி மேலாளரான 42 வயது ஷேரன் டான் தனக்கு விதிக்கப்பட்ட ஏழு மாதச் சிறைத் தண்டனையை முடித்துவிட்டார். மூன்று ஆண்டு, நான்கு மாதச் சிறைத் தண்டனையை எதிர்நோக் கும் முன்னாள் நிதி மேலாளரான 57 வயது சியூ எங் ஹான் நீதி மன்றத்தின் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை பிணையில் விடுவிக்கப்பட்டி ருந்தார்.

(மேல் வரிசை இடமிருந்து) கொங் ஹீ, டான் யி பெங், செரினா வீ (கீழ் வரிசை இடமிருந்து) ஷேரன் டான், சியூ எங் ஹான், ஜான் லாம். கோப்புப் படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்