உள்துறை அமைச்சு: 2017ல் குற்ற விகிதம் குறைந்தது

1 mins read

ஒட்டுமொத்த குற்ற விகிதம் கடந்த ஆண்டு குறைந்திருந்தாலும் இணையக் காதல் மோசடிகளும் மானபங்கச் சம்பவங்களின் அதிக ரிப்பும் அக்கறைக்குரிய அம்சங்க ளாக உள்ளன என்று உள்துறை அமைச்சு நேற்று தெரிவித்தது. கடந்த ஆண்டில் குடியரசின் பாதுகாப்பு, இடர்காப்பு நிலவரம் பற்றிய அறிக்கையை நேற்று வெளியிட்ட அமைச்சு, 2016ஆம் ஆண்டைக்காட்டிலும் கடந்த ஆண்டு நிகழ்ந்த குற்றங்களின் எண்ணிக்கை குறைந்தது என்றது.

2016ஆம் ஆண்டில், ஒவ் வொரு 100,000 மக்கள் தொகையில் 588 குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்தன. 2015ல் அந்த எண்ணிக்கை 611ஆக இருந்தது. 2016ல் வன்முறை மற்றும் கடுமையான சொத்துக் குற்றங்கள் 248ம், திருட்டு மற்றும் அது தொடர்பான குற்றங்கள் 14,127ம் நிகழ்ந்தன. ஆனால், இந்த இரு பிரிவுகளிலும் கடந்த ஆண்டு குற்றங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் சரிவுகண்டது.

கடந்த ஆண்டில் மானபங்கச் செயல்கள் அதிகரித்தன. கடந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்க ளில் 1,168 புகார்கள் கிடைக்கப் பெற்றன என்றும் இது 2016ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க 194 சம்பவங்கள் அல்லது 19.9% அதிகம் என்றும் அமைச்சு கூறியது.