முதியோர் கண்ணியத்துடன் மூப்படைவதற்கு எவ்வாறு உதவி செய்யலாம் என்பது குறித்த கலந்துரையாடலை நாடாளுமன்றத்தில் மக்கள் செயல் கட்சியின் மூத்தோர் குழு வழிநடத்தவுள்ளது. இதை விவாதிப்பதற்கு மூத்தோர் குழு தீர்மானத்தை முன்மொழிந்துள்ளது. வேலையிடத்தில் மூப்படைவதை மறுவரையறை செய்வது, அசையா சொத்துகளை பணமாக்குவதற்கு உதவுவது, மின்னிலக்கத்தைப் பற்றி அறிந்துகொண்டு செயல்படுவதற்கு உதவுவது போன்றவை குறித்து கலந்துரையாடல் நடக்கக்கூடும். அதோடு, சிட்டி ஹார்வஸ்ட் தேவாலய வழக்கு மேல்முறையீட்டின் முடிவு தொடர்பில் அமைச்சர்நிலை அறிக்கையும் அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூடும்போது தாக்கல் செய்யப்படும். அண்மையில் சிங்கப்பூரின் பல பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் குறித்தும் உறுப்பினர்கள் பலர் கேள்வி எழுப்பவுள்ளனர்.
முதியோருக்கான ஆதரவு குறித்து நாடாளுமன்றத்தில் கலந்துரையாடல்
1 mins read

