சிங்கப்பூரின் முதல் மின்சார சைக்கிள் பகிர்வு திட்டத்தை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களும் ஊழியர்களும் பயன்படுத்த உள்ளனர். இன்னும் மூன்று வாரங்களில் அந்தத் திட்டத்தின் சோதனை பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கப்படவுள்ளது. 20 மின்சார சைக்கிள்களும் இரண்டு மின்னேற்றி நிலையங்களும் முதலில் அறிமுகம் காணவுள்ளன. ஓராண்டு கால சோதனையின்போது இலவசமாக சைக்கிள்களைப் பயன்படுத்தலாம் என்று பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
பெரிய வளாகத்தில் சுற்றுச் சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறையாக இது அமையும் என்றும் கூறப்படுகிறது. ஆரோக்கியமான வாழ்க்கைத் தரத்தையும் இந்தப் புதிய முறை ஊக்குவிக்கிறது. மின்சார வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பல்கலைக்கழகத்தின் முயற்சிகளில் இதுவும் ஒன்று.

