கலைகளுக்கு மேலும் ஆதரவு; அமைச்சர் உறுதி

கலைகளுக்கு மேலும் ஆதரவு; அமைச்சர் உறுதி

1 mins read

கலைகளின் மதிப்பை பொருளா தார ரீதியில் கணக்கிட முடியாது. ஆனால், சிங்கப்பூரின் ஒட்டு மொத்த மேம்பாட்டிற்கு அது அத் தியாவசியமான ஒன்று என்று கல்வி அமைச்சர் (உயர் கல்வி, திறன்கள்) ஓங் யி காங் தெரி வித்தார். நன்யாங் நுண்கலைக் கழகத்தின் 80ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். ஒரு தேசமாக சிங்கப்பூரின் ஆன்மாவை வெளிப்படுத்த கலைகள் உதவுவதாக கூறிய அமைச்சர், கல்வி அமைச்சு கலைகளுக்கு ஆதரவு அளிக்கும் என்றும் தெரிவித்தார். பள்ளியின் 'கேம்பஸ் 1 டவர் புளோக்' கட்டடத்தையும் திரு ஓங் நேற்று திறந்துவைத்தார். நன்யாங் நுண்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர் ஹான் சை பொர்ரின் உருவச் சிலையும் அறிமுகப்படுத்தப்பட்டது.