ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் மரணம்

ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் மரணம்

1 mins read

ஹவானா: கியூபா புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகனான ஃபிடல் ஏஞ்சல் காஸ்ட்ரோ டியஸ்-பாலார்ட்(வயது 68), அந்நாட்டின் தலைநகர் ஹவானாவில் தற்கொலை செய்துகொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் சோவியத் யூனியனில் படித்த அணுசக்தி இயற்பியலாளரான டயஸ் பாலார்ட், கியூபா அரசாங்கத்தின் அறிவியல் ஆலோச கராகவும் கியூபா அறிவியல் கழகத் தின் துணைத் தலைவராகவும் பணியாற்றி வந்தார். மன அழுத்தத் தால் பாதிக்கப்பட்டிருந்த டயஸ் பாலார்ட் பல மாதங்களாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சையைத் தொடர்ந்தார். ஆனாலும் அவர் மன அழுத்தத்தில் இருந்து விடுபடாமல் இருந்துள்ளார். இதன் காரணமாக, விரக்தி அடைந்த அவர் வியாழக்கிழமை காலை தற்கொலை செய்துகொண்டதாக கியூபா அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இறுதிச் சடங்குகள் குறித்து அவரது குடும் பத்தினர் முடிவெடுப்பார்கள் என்று அரச தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடி அந்த நாட்டிற்கு சிம்மசொப்பனமாக விளங்கிய ஃபிடல் காஸ்ட்ரோ, 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவரது 90வது வயதில் மரணம் அடைந்தார். அவர் மறைந்து ஓர் ஆண்டு நிறைவடைந்த நிலையில், அவரது மகன் தற்கொலை செய்துகொண்டது கியூபா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.