கலைகளின் மதிப்பை பொருளா தார ரீதியில் கணக்கிட முடியாது. ஆனால், சிங்கப்பூரின் ஒட்டு மொத்த மேம்பாட்டிற்கு அது அத் தியாவசியமான ஒன்று என்று கல்வி அமைச்சர் (உயர் கல்வி, திறன்கள்) ஓங் யி காங் தெரி வித்தார். நன்யாங் நுண்கலைக் கழகத்தின் 80ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். ஒரு தேசமாக சிங்கப்பூரின் ஆன்மாவை வெளிப்படுத்த கலைகள் உதவுவதாக கூறிய அமைச்சர், கல்வி அமைச்சு கலைகளுக்கு ஆதரவு அளிக்கும் என்றும் தெரிவித்தார்.
பள்ளியின் 'கேம்பஸ் 1 டவர் புளோக்' கட்டடத்தையும் திரு ஓங் நேற்று திறந்துவைத்தார். நன்யாங் நுண்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர் ஹான் சை பொர்ரின் உருவச் சிலையும் அறிமுகப்படுத்தப்பட்டது. $40 மில்லியன் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய கட்டடம் 2004ஆம் ஆண்டிலி ருந்து பென்கூலன் ஸ்திரீட் வளாகத்தில் செயல்பட்டு வந்த இப்பள்ளியின் முதல் விரிவாக்க மாகும். 1938ஆம் ஆண்டு கேலாங்கில் உள்ள ஒரு கடை வீட்டில் திரு லிம் ஹக் டையால் நிறுவப்பட்டது. 12 மாடிகளில் மொத்தம் 7,700 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட புதிய கட்டடம் 20 விழுக்காடு அதிகமான இடவச தியை அளிக்கும். 2,200 மாணவர்களுக்கான இடவசதியில் 2,400 மாணவர்கள் பயின்று வந்தனர். சென்ற ஆண்டு ஜூலை மாதம் செயல் பாட்டிற்குத் திறக்கப்பட்ட புதிய கட்டடத்தில் தற்போது இப்பள்ளி யில் 2,700 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

