இதுவரை யாரும் காணாத ஆறு ஆகாய சாகசங்களை இவ்வாண் டின் விமான காட்சியில் காணலாம். சிங்கப்பூர் ஆகாயப் படையின் 50வது ஆண்டு நிறைவையொட்டி இவ்வாண்டின் விமான காட்சியில் இந்தப் புதிய சாகசங்கள் நடைபெற விருக்கின்றன. எஃப்15எஸ்ஜி ரக போர் விமா னம் ஒன்றும் எஃப்16சி ரக போர் விமானம் ஒன்றும் அந்த 15 நிமிட விமான சாகசங்களை நிகழ்த்தவி ருக்கின்றன. இந்த இரண்டு ரக விமானங்கள் ஒரே நேரத்தில் சாகசங்கள் புரிவது இதுவே முதல் முறை.
ஒவ்வொரு ரக விமானத்தின் திறன்களைக் காட்டும் மொத்தம் 15 சாகசங்கள் படைக்கப்படும். எஃப்15எஸ்ஜி ரக விமானம் ஒரு மணி நேரத்திற்கு 1,000 கிலோமீட்டர் வேகத்தில் அந்த 15 நிமிட சாகசத்தின்போது செல்லும். சாங்கி கண்காட்சி மையத்தில் நேற்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. மூன்று மாதங்களாக பயிற்சி செய்யப்பட்ட இந்த சாகசங்கள் பொதுமக்களுக்கு அனுமதிக்கப் படும் இரு விமான காட்சி நாட்களிலும் ஒரு நாளுக்கு இரு முறை நடத்தப்படும். காலை 11.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும் பிற்பகல் 2.30 மணி முதல் 3 மணி வரையிலும் அந்த சாகசங்கள் நடத்தப்படும்.
ஆகாயத்தில் நடத்தப்படும் சாகசங்களைத் தவிர ஆகாயப் படையின் போர் விமானங்களும் ஆயுதங்களும் காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கும். ஆகாயப் படையின் 50வது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்க ளின் தொடக்கவிழா இம்மாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிபர் ஹலிமா யாக்கோப் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கி றார். 50வது ஆண்டு நிறைவை ஒட்டி சிறப்பு வண்ணங்கள் பூசப் பட்ட எஃப்15எஸ்ஜி ரக விமானம் தொடக்கவிழாவில் அறிமுகம் காணும்.

