புது வகை சிகரெட் அட்டைப்பெட்டி: பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்

புது வகை சிகரெட் அட்டைப்பெட்டி: பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்

1 mins read

ஒரே அளவாக வகைப்படுத்தப்பட்ட, உடல்நலப் பாதிப்புகள் பற்றிய எச்சரிக்கைத் தகவல்களை 25% பெரிய அளவில் கொண்டிருக்கின்ற சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள் அட்டைப்பெட்டிகள் பற்றி பொதுமக்களின் கருத்துகளைச் சுகாதார அமைச்சு நாடுகிறது. மக்கள், பிப்ரவரி 5 முதல் ஆறுவார காலத்திற்குத் தங்கள் கருத்துகளை, யோசனைகளைத் தெரிவிக்கலாம் என்று அமைச்சு நேற்று அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.

சிங்கப்பூரில் அண்மைய ஆண்டுகளில் புகைபிடிக்கும் விகிதம் குறைகிறது என்றாலும் அந்தக் குறைவு மந்தமாக இருக்கிறது. இந்தப் புதிய தரப்படுத்தப்பட்ட அட்டைப்பெட்டி யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டால் அது சிகரெட் இல்லாத சமூகத்தைச் சாதிப்பது என்ற சிங்கப்பூர் உத்தியின் ஓர் அங்கமாக இருக்கும்.

பொதுமக்கள் தங்கள் கருத்துகளை, யோசனைகளை எண் 16, காலேஜ் ரோடு முகவரியில் உள்ள இந்த அமைச்சு கட்டடத்தில் எழுத்து மூலமாக தாக்கல் செய்யலாம். அல்லது MOH_Tobacco_Control@moh.gov.sg என்ற இணைய முகவரி மூலம் தெரிவிக்கலாம். ரீச் அமைப்பின் www.moh.gov.sg/proposed-tobacco-control-measures இணைய முகவரியில் மேல் விவரங்களைப் பெறலாம்.