கொஞ்சகால வாடகை: விரைவில் ஒழுங்குமுறை அறிக்கை

கொஞ்சகால வாடகை: விரைவில் ஒழுங்குமுறை அறிக்கை

1 mins read

சிங்கப்பூரில் குடியிருப்பு இடத்தைக் கொஞ்சகாலத்திற்கு வாடகைக்கு விடுவதற்கான ஒழுங்குமுறைத் திட்டத்தை கொண்டிருக்கும் அறிக்கை ஒன்று வரும் ஏப்ரலுக்கு முன்னதாக வெளியிடப்படும். Airbnb போன்ற பாணியில் சிங்கப்பூரில் குடியிருப்பு இடத்தை தற்காலிகமாக வாடகைக்கு விடுவதன் தொடர்பிலான விவரங்களை இந்த அறிக்கை வெளிப்படுத்தும் என்று தெரிகிறது.

இந்த உத்தேச விதிமுறைகள் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வெளியிடப்படும் என்றும் அதன் தொடர்பில் யோசனைகள், கருத்துகள் திரட்டப்படும் என்றும் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்ததாக சண்டே டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

"கொஞ்ச காலத்திற்குக் குடியிருப்பு இடத்தை வாடகைக்குக் கொடுக்க அனுமதிக்கும் ஓர் ஏற்பாடு இருக்கவேண்டும் என்று நாம் விரும்புகிறோம். "அந்த ஏற்பாட்டில் சரியான கட்டுப்பாடுகளும் பாதுகாப்புகளும் இருக்கவேண்டும்," என்று திரு வோங் குறிப்பிட்டார். இந்த உத்தேச விதிமுறைகள் தொடர்பான பொது ஆலோசனை ஏறக்குறைய ஓராண்டு காலத்திற்கு இடம்பெறும்.