சீனப் புத்தாண்டு சமய நல்லிணக்க விருந்து

சீனப் புத்தாண்டு சமய நல்லிணக்க விருந்து

1 mins read
dc796a8b-c30e-4dd2-a9fb-d31d7c9cb777
-
Google News Preferred Icon

வில்சன் சைலஸ்

ஆதரவற்ற மூத்தோருக்குச் சேவை செய்ய கிடைத்த வாய்ப்பு, தாய் தந்தைக்குச் சேவை செய்த திருப்தியைத் திருமதி அம்பிகா வுக்கு அளித்தது. சவுத் பிரிட்ஜ் சாலையின் ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் நேற்று முன் தினம் ஏற்பாடு செய்த சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட மூத்தோருக்கு உணவு பரிமாறி மகிழ்ந்தார், 54 வயது திருமதி அம்பிகா கமல நாதன்.

திருமதி அம்பிகாவைப் போன்று ஸ்ரீ மாரியம்மன் ஆலயத் தின் தொண்டூழியர்கள் பதினைந் தாவது முறையாக ஏற்பாடு செய் யப்பட்ட சீனப் புத்தாண்டு விருந் தில் மூத்தோருடன் அளவளாவி உற்சாகமடைந்ததுடன் அன்பளிப் புப் பைகளுக்கான பொருட்களை நன்கொடையாக வழங்கினர். தெம்புசு, கிரேத்தா ஆயர் போன்ற ஆதரவற்றோர் இல்லங் களைச் சேர்ந்த சுமார் 120 மூத்தோரைக் கலை நிகழ்ச்சிகள் மகிழ்வித்ததுடன் அவர்களுக் கென பிரத்தியேகமாகத் தயாரிக் கப்பட்ட உணவு வகைகளும் பரிமாறப்பட்டன.

சீனப் புத்தாண்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சட்ட, நிதிக்கான மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா முதியோருடன் கலந்துரை யாடினார். படம்: த. கவி