வான்வெளித் துறையில் பணி புரியும் இருபதாயிரத்திற்கும் மேற் பட்ட ஊழியர்களில் 70 விழுக் காட்டிற்கும் அதிகமானோர் உயர் தேர்ச்சி பெற்றவர்கள். இது அறி வும் தொழில்நுட்பமும் செறிந்ததாக அந்தத் துறை இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது என்று வர்த்தக, தொழில் அமைச்சர் (தொழில்) எஸ்.ஈஸ்வரன் தெரிவித் துள்ளார். ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந் தோசா மாநாட்டு மையத்தில் ஐந் தாவது 'ஏ ஸ்டார்' வான்வெளித் தொழில்நுட்பத் தலைமைத்துவக் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இப்போதைக்கு பராமரிப்பு, சீரமைப்பு, முழுமையான பழுதுபார்ப் பிற்கான ஆசியச் சந்தையில் 25 விழுக்காட்டிற்குச் சற்று கூடுதலாக வும் அனைத்துலகச் சந்தையில் பத்து விழுக்காட்டையும் சிங்கப்பூர் கொண்டிருப்பதாக அமைச்சர் ஈஸ்வரன் குறிப்பிட்டார்.
சென்ற மாதம் அறிவிக்கப்பட்ட வான்வெளித் துறை உருமாற்றத் திட்டம் புத்தாக்கத்தில் அதிக கவனம் செலுத்துவதாக திரு ஈஸ்வரன் குறிப்பிட்டார். உள்ளூர் வர்த்தகங்கள், குறிப் பாக சிறிய, நடுத்தர நிறுவனங்கள் உற்பத்தி மேம்பாடு, புத்தாக்கம் ஆகியவற்றில் மதிப்புமிக்க நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார். பொது-தனியார் துறைப் பங் காளித்துவம், தொழிலகங்களின் உண்மையான தேவைகள் அடிப் படையில் தீர்வுகளை உருவாக்கு வதை முடுக்கிவிடும் என்றும் அவர் சொன்னார்.

