சிங்கப்பூரின் முதல் ஆளில்லா வானூர்தி (டிரோன்) பேட்டையான போனவிஸ்தாவில் உள்ள ஒன்- நார்த் வட்டாரத்தில் அதிக எண் ணிக்கையிலான டிரோன்களை எதிர்பார்க்கலாம். நிறுவனங்களுக் கும் ஆய்வுக் கழகங்களுக்கும் நகர்ப்புறச் சூழலில் ஆளில்லா வானூர்தி அமைப்புகளை சோதனை செய்துபார்ப்பதற்கான தளத்தை வழங்குவது இந்த முயற்சியின் நோக்கம்.
இது ஆளில்லா வானூர்தித் திறன்களைக் கொண்ட உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சி காண உதவுவதுடன் வர்த்தக ரீதியிலான பங்காளித் துவங்களும் ஏற்படலாம் என்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நேற்று தெரிவித்தார். சிங்கப்பூர் விமானக் கண்காட்சி விமானத்துறை தலைமைத்துவ உச்சநிலை மாநாட்டை நேற்று தொடங்கி வைத்தபோது இந்தப் புதிய முயற்சி குறித்து அமைச்சர் அறிவித்தார்.

