வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் 3,664 தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) வீடுகளை நேற்று வெளியிட் டது. இவ்வாண்டின் முதல் விற் பனையில் சுவா சூ காங், கேலாங், உட்லண்ட்ஸ், தெம்பனிஸ் ஆகிய நான்கு வட்டாரங்களில் வீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வீடுகள் திறந்த நிலை சமையலறைகளுடன் கட்டப்பட உள்ளன. இந்த ஆண்டில் வெளி யிடப்பட உள்ள மொத்தம் 17,000 வீடுகளில் இவையும் அடங்கும். இந்த மாதம் ஐந்து தேவைக் கேற்ப கட்டப்படும் திட்டங்கள் இடம்பெறுகின்றன. ஈரறை ஃபிளெக்ஸி முதல் ஐந்தறை வீடுகள் வரையில் இதில் இருக்கும் என்று வீவக நேற்று வெளியிட்ட செய்தி அறிக்கையில் குறிப்பிட்டது. இரு குடியிருப்புகள் முதிர்ச்சி யடையாத குடியிருப்புகளான சுவா சூ காங், உட்லண்ட்ஸ் ஆகிய இடங்களிலும் ஏனைய மூன்றும் முதிர்ச்சியடைந்த குடியிருப்புக ளான தெம்பனிஸ், கேலாங் ஆகிய இடங்களிலும் அமைக்கின்றன. உட்லண்ட்ஸ் ஈரறை ஃபிளெக்ஸி வீட்டுக்கு $71,000 லிருந்து கேலாங் ஐந்தறை வீட் டுக்கு $429,000 வரையில் விலை கள் இருக்கும்.
3,664 புதிய வீவக வீடுகள் அறிமுகம்
1 mins read
-

