மெய்நிகர் நாணயங்களால் ஏற்படக்கூடிய அபாயங்களை சிங்கப்பூர் நாணய ஆணையம் ஆய்வுசெய்து வருகிறது என்றும் இதுவரை அந்த மின்னிலக்க நாணயங்களின் பரிவர்த்தனையைத் தடை செய்வதற்கு வலுவான காரணம் இல்லை என்றும் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார். மெய்நிகர் நாணயங்கள் சோதனைமுறையில் உள்ளன. அனைத்துலக அளவில் அதன் எண்ணிக்கையும் வகைகளும் பெருகி வருகின்றன. அவை வெற்றி பெறுமா என்பது குறித்து தற்போது கூற முடியாது என்றும் அதற்கு சற்று காலம் எடுக்கும் என்றும் திரு தர்மன் கூறினார்.
'மெய்நிகர் நாணய வர்த்தகத்தை தடை செய்ய வலுவான காரணம் இல்லை'
1 mins read
-

