விபத்தில் ஓட்டுநர் கை துண்டானது

விபத்தில் ஓட்டுநர் கை துண்டானது

1 mins read
46c9404b-0952-46c4-856a-6ef3a17fbe8f
-
Google News Preferred Icon

லாரி தலைகுப்புறப் புரண்டதில் 40 வயது ஓட்டுநரின் கை துண்டானது. துவாஸ் சவுத் அவென்யூ 1ல் திங்கட்கிழமை நடந்த இந்த விபத்து குறித்து பகல் 12.55க்கு போலிசுக்குத் தகவல் கிடைத்தது. லாரியின் முன்புற கண்ணாடி சிதறிய நிலையில் லாரியினுள் இருந்த பொருட்கள் சாலையில் கிடந்தன என்று தெரிவிக்கப்பட்டது. லாரி ஓட்டுநர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. சம்பவம் குறித்து விசாரணை தொடர்கிறது. படம்: ஃபேஸ்புக்