நீரிழிவுக்கு எதிரான போரின் அடுத்த கட்ட திட்டமாக, 2020க் குள் சிங்கப்பூரர்கள் சர்க்கரை உட்கொள்ளும் அளவை கால்வாசி யாகக் குறைக்க சுகாதார மேம் பாட்டு வாரியம் இலக்குக் கொண் டுள்ளது. அத்துடன், சிங்கப்பூரர்களின் உணவில் அதிகமான முழு தானியங்கள் போன்ற தீட்டப்படாத மாவுச்சத்துப் பொருட்களை இடம்பெறச் செய்யவும் வாரியம் முனைந்துள்ளது. இனிப்புப் பலகாரங்கள், சாஸ், சுவை பானங்களில் சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவும் வழி காட்டிகளை உணவு தயாரிப்பாளர் களுக்கு அது தயாரித்து வரு கிறது.
வரும் 2020க்குள் சுவை பானங்களில் சர்க்கரையின் அளவை 12% குறைப்பதாக, ஏழு சுவை பான நிறுவனங்கள் ஏற்கெ னவே உறுதியளித்துள்ளன. தற்போது, சராசரியாக ஒருவ ரது உணவின் மாவுச்சத்தில் சோறு, நூடுல்ஸ் போன்ற தீட்டப் பட்ட மாவுச்சத்துப் பொருட்களும் கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் சீனியும் பெரும் பகுதியாகச் சேர்ந் துள்ளன. ஒருவர் சாப்பிடும் தீட்டப்பட்ட மாவுச்சத்துப் பொருளில் 22 விழுக்காடு சர்க்கரை உள்ளது. இதை 17 விழுக்காடாகக் குறைக்க வாரியம் எண்ணுகிறது. அதேநேரத்தில், தீட்டப்படாத மாவுச்சத்துப் பொருட்களை அதிக ரிக்கவும் அது திட்டமிடுகிறது. பொதுமக்கள் 17 விழுக்காடு முதல் 35 விழுக்காடு வரையில் தீட்டப்படாத மாவுச்சத்துப் பொருட் களை உண்கின்றனர்.

