லோவர் டெல்டா ரோட்டில் ஒருவர் ஓட்டிச்சென்ற லாரி அங்குள்ள வடிகால் ஒன்றில் விழுந்துவிட்டது. அதையடுத்து அந்த ஆடவர் மருத்துவ வாகனத்தில் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்தச் சம்பவம் பற்றி நேற்று மாலை 6 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. விபத்தில் சிக்கிய ஆடவருக்குக் கடுமையான காயம் எதுவும் இல்லை என்று தெரிகிறது.
லாரி கால்வாயில் விழுந்தது; ஆடவர் காயம்
1 mins read
-

