பெண்ணுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்தவருக்கு 6 மாத சிறை

1 mins read
b2bf274a-cf1c-41ad-9dd6-efe467b14771
-

தன்னுடன் சேர்ந்து பழகும்படி ஓர் ஆடவர் விடுத்த வேண்டுகோளை ஒரு பெண்மணி நிராகரித்துவிட்டார். அதனையடுத்து அந்த ஆடவர் அந்தப் பெண்மணியை இடைவிடாது விரட்டினார். 12 மின்னஞ்சல் கணக்குகளைப் பயன்படுத்தி பல மின்னஞ்சல்களை அவர் அனுப்பினார். அந்தப் பெண்மணியின் நல்ல பெயரை, அவரின் சகாக்களிடையே கெடுப்பதற்கும் அவர் முயன்றார். இத்தகைய குற்றங்களுக்காக சுன் காய் சின், 35, என்ற அந்த ஓவியருக்கு நேற்று ஆறு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2015ல் ஓரிரு மாதங்களுக்கு சுன்னுடன் அந்தப் பெண்மணி தோழமையுடன் இருந்தார் என்றும் அதனையடுத்து 2015 நவம்பர் முதல் ஆடவர் பிரச்சினைக் கொடுக்க தொடங்கியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.