ஆகாயத்தில் எதிர்பாராவிதமாக ஏற்படக்கூடிய மிரட்டல்களைச் சமாளிக்க உதவும் வழிகாட்டி நெறிமுறைகள் தொடர்பில், ஆசி யான் நாடுகளுக்கிடையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் இணக்கம் ஏற்படும் என்று சிங் கப்பூர் நம்புகிறது. அத்தகைய நெறிமுறைகள், தவறான கணக்கீடுகளையும் பாதிப்புச் சம்பவங்களையும் குறைத்துவிடும்.
பிரச்சினைகள் ஏற்படும்போது அவற்றைத் தணிப்பதற்கான நடவடிக்கைகளை அந்த நெறிமுறைகள் தெரிவிக்கும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் குறிப்பிட்டார். ஆசியான் தற்காப்பு அமைச் சர்கள் கூட்டம் சாங்கி கண்காட்சி நிலையத்தில் நடந்தது. அதற்கு ஒரு நாள் கழித்து ஊடகத்திடம் பேசிய டாக்டர் இங், இரண்டு நாள் சந்திப்பின்போது ஆசியான் தற்காப்புத் துறை தலைவர்கள் விவாதித்த அம்சங்கள் பற்றி செய்தியாளரிடம் விளக்கினார்.

