கடந்த ஆண்டில் காலியான வேலைகள் வேகமாக நிரம்பின

கடந்த ஆண்டில் காலியான வேலைகள் வேகமாக நிரம்பின

1 mins read
dc46f522-251b-4103-a697-6de4da8d4d36
-

காலியான வேலைகளின் எண் ணிக்கை கடந்த ஆண்டும் தொடர்ந்து மூன்றாவது ஆண் டாகக் குறைந்தது. இருப்பினும், முதலாளிகள் அந்த இடங்களை நிரப்ப பொருத் தமான ஊழியர்களை முந்திய ஆண்டைக் காட்டிலும் விரை வாகக் கண்டறிந்ததாக வேலை காலியிடங்கள் தொடர்பாக மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஆறு மாதங் கள் வரை நிரப்பப்படாத வேலை களின் விகிதாச்சாரம் 33 விழுக் காட்டுக்கு இறங்கியது. இந்த விகிதம் கடந்த 2016ஆம் ஆண்டு 36 விழுக் காடாக இருந்தது. மொத்தமாக, கடந்த ஆண்டு செப்டம்பர் இறுதிவாக்கில் 53,100 வேலைகள் காலியாக இருந்தன. அந்த எண்ணிக்கை 2016ஆம் ஆண்டைக் காட்டிலும் குறைவு. அந்த ஆண்டில் 53,800 வேலை கள் காலியாக இருந்தன.

ஆக அதிகமாக 2014ஆம் ஆண்டில்தான் 67,400 வேலை கள் காலியாக இருந்தன. கடந்த ஆண்டில் காலியாக இருந்த மொத்த இடங்களில் நிபு ணர்கள், மேலாளர்கள், நிர்வாகி கள், தொழில்நுட்பர்கள் ஆகி யோரை உள்ளடக்கிய பிஎம்இடி பிரிவு 56 விழுக்காட்டை வகிக் கிறது. அந்தப் பிரிவில் காலியான வேலைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு உயர்ந்தது.