அதிகாரிகளிடம் பொய்யான தக வல்களைத் தந்து சிங்கப்பூருக்குள் 12 மில்லியன் வெள்ளியைக் கொண்டு வந்த குற்றத்துக்காக மலேசிய ஆடவர் ஒருவருக்கு நேற்று 36 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அப்துல் ஜலீல் சுலைமான், 47, எனப்படும் அவர் எட்டு மாதங் களில் இந்தத் தொகையை மலே சியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் கொண்டு வந்துள்ளார். சிங்கப் பூருக்குள் சட்டவிரோதமாக எடுத்து வரப்பட்ட ஆக அதிகமான சட்ட விரோதப் பணம் இது. 2013 செப் டம்பர் 4 முதல் 2014 ஏப்ரல் 16 வரையிலான காலகட்டத்தில் இக் குற்றச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆறு பிள்ளைகளுக்குத் தந்தை யான அப்துல் ஜலீல், தம் மீது சுமத்தப்பட்ட 30 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கான தண்டனை அறிவிக் கப்பட்டது. இந்திய நாட்டவரான முகமது சலீம் என்பவர் மலேசியாவில் நிரந் தரவாசியாக உள்ளார். அங்கு அவருக்கு நான்கு அல்லது ஐந்து நாணய மாற்றுக் கடைகள் உள் ளன.
$12 மில்லியன் ரொக்கம் கொண்டு வந்த மலேசிய ஆடவருக்கு சிறை
1 mins read

