நாயைக் கொடுமைப்படுத்தியவருக்கு 12 வாரச் சிறை

1 mins read
44e4b2de-4571-4eb5-883f-8b285ac27b18
-

ஒரு மூன்றரை வயது நாயை ஆறுமாத காலம் கொடுமைப்படுத்திய ஆடவருக்கு 12 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிறைத்தண்டனை முடித்து வெளிவந்த பிறகு ஓராண்டு காலத்திற்கு எந்த விலங்கையும் இவர் வளர்க்கக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டது. கடைசியாக அந்த நாய் 2016 கிறிஸ்மஸ் அன்று மாண்டுவிட்டது. ஜெரால்ட் கோக் சின் ஓய், 23, என்ற இந்த ஆடவர், நாயைக் கொடுமைப்படுத்தியதாகக் கூறும் ஏழு குற்றச்சாட்டுகளில் நான்கின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இவர், தோ பாயோவில் இருக்கும் தன்னுடைய முன்னாள் காதலியின் வீட்டில் 2016 ஜூலை முதல் டிசம்பர் 25 வரை அந்த நாயைக் கொடுமைப்படுத்திய தாகக் கூறப்பட்டது.

12 வாரம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஜெரால்ட் கோக். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்