ஜோகூரில் இருக்கும் மலை ஒன்றில் திங்கட்கிழமை மாலை நேரம் முதல் காணாமல் போயிருந்த இரண்டு சிங்கப்பூர் மலையேறிகள் படகு மூலம் நேற்று மீட்கப்பட்டனர். ஹெலிகாப்டரில் சென்ற மீட்புப் படையினர் நேற்று முற்பகல் 11.30 மணிக்கு அந்த இருவரையும் கண்டனர். உடனடியாக ஒரு படகு அங்கு அனுப்பப்பட்டது. ஐந்து நிமிடத்தில் அவ்விருவரும் பத்திர மாக மீட்கப்பட்டனர். அந்த இருவரின் உடல்களிலும் சிராய்ப்புக் காயங்களும் வெட்டுக் காயங்களும் இருந்தன. அவர்கள் களைத்துப்போயிருந்ததாக தெரிந் தது. அவர்கள் உடலில் நீர்ச்சத்து குறைந்திருந்தது,
இருந்தாலும் வழக்கமாக அவர் களால் பேச, கலந்துறவாட முடிந் தது என்று கூலாய் தீயணைப்புத் துறை தலைவர் முகம்மது காய்ரி சைனுதீன் குறிப்பிட்டார். இவர், தேடி மீட்பு நடவடிக்கை களுக்குத் தலைமை வகித்தார். டோமினிக் டான் சாங் சியாங், 27, குமாரி லும் ஜி, 27 ஆகிய சிங்கப்பூரர்களான அந்த இரண்டு மலையேறிகளின் படங்களையும் ஃபேஸ்புக் பக்கத்தில் ஜோகூர் போலிஸ் நேற்று பதிவேற்றியது. அந்த இருவரும் பொந்தியான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். டானும் லும்மும் திங்கட்கிழமை மலை ஏறுவதற்காக ஜோகூரின் கூலாய் மாவட்டத்தில் இருக்கும் குனூங் பூலாய் மலைக் குச் சென்றனர்.
ஜோகூர் பாருவுக்கு வடக்கே இருக்கிறது கூலாய். ஜோகூர் பாருவிலிருந்து கூலாய்க்கு காரில் செல்ல 1 மணி நேரம் பிடிக்கும். இருவரும் காணாமல் போனதை அடுத்து சுமார் 100 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
ஜோகூரில் உள்ள மலை ஒன்றில் காணாமல்போன சிங்கப்பூரர்களான இரண்டு மலையேறிகளை மலேசியாவின் தேடி மீட்கும் குழு நேற்று மீட்டது. படம்: ஃபேஸ்புக்/ஜோகூர் போலிஸ்