பொத்தோங் பாசிர் சமூக மன்றத்தில் உள்ள சிங்போஸ்ட் கிளையிலிருந்து $3,000 கொள்ளையடித்த ஓர் ஆட வரைப் பற்றிய தகவலைத் தெரி விக்கும்படி பொதுமக்களுக்கு போலிஸ் வேண்டுகோள் விடுத்து இருக்கிறது. அந்தக் கொள்ளை சம்பவத் தில் ஆயுதம் எதுவும் பயன் படுத்தப்படவில்லை. யாருக்கும் காயமில்லை. கொள்ளை பற்றி நேற்று தங்களிடம் புகார் தெரி விக்கப்பட்டதாக போலிஸ் தெரி வித்தது. வாய்மூடியைப் போட்டுக் கொண்டு ஆடவர் ஒருவர் அந்த அலுவலகத்துக்குள் நுழைந்து அங்கிருந்த பெண் ஊழியரிடம் எல்லா பணத்தையும் கொடுக்கும் படி கேட்டார். அந்தப் பெண் உடனடியாக ஓர் அறைக்குள் ஓடிவிட்டார். ஆடவர் முகப்பில் ஏறிக்குதித்து அங்கிருந்த $3,000 பணத்துடன் தப்பி ஓடிவிட்டார்.
தகவல் தெரிந்தவர்கள் 1800- 255-000 என்ற எண் மூலம் தொடர்புகொள்ளலாம். அல்லது www.police.gov.SG/iwitness என்ற இணைய முகவரியில் விவரங்களைத் தாக்கல் செய்ய லாம்.
சிங்போஸ்ட் கிளையில் இருந்து $3,000 கொள்ளையடித்த சந்தேகநபர் பற்றிய விவரங் களை போலிஸ் நாடுகிறது. படம்: சிங்கப்பூர் போலிஸ்

