சிங்கப்பூரில் கைதுசெய்யப்பட்ட குடிநுழைவு குற்றவாளிகளின் எண்ணிக்கை சென்ற ஆண்டில் குறைந்தது. ஆனால் கள்ளத் தனமான பொருட்களைக் கடத்தும் சம்பவங்கள் அதிகரித்தன. போலி திருமணங்களும் கூடின. குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன. சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்தவர்கள், அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மேலாக இங்கு சட்ட விரோதமாகத் தங்கியிருந்தவர்கள் ஆகியோர் உள்ளிட்ட குற்றவாளி களின் எண்ணிக்கை 2016ல் 1,278 ஆக இருந்தது. இது சென்ற ஆண்டு 1,176 பேராகக் குறைந்தது.
இந்த எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாகவே குறைந்து வருகிறது. சிங்கப்பூர் எல்லையைக் கடந்து செல்ல முயன்று பிடிபட்டவர்களின் எண்ணிக்கையும் 2017ல் குறை வாக இருந்தது. இந்தக் குற்றத் திற்காக 2017ல் 186 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த எண்ணிக்கை 2016ஆம் ஆண்டு இதே குற்றவாளிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் 14.3% குறைவு. சட்டவிரோதமாக சிங்கப்பூரில் தங்கியிருந்து பிடிபட்டவர்களின் எண்ணிக்கை 2017ல் 990. இது 2016ஆம் ஆண்டைவிட 6.7% குறைவு. இருந்தாலும் கள்ளக் கடத்தல்கள் எண்ணிக்கை சென்ற ஆண்டு அதிகரித்துவிட்டது.
கூட்டு அமலாக்க நடவடிக்கை ஒன்றின்போது கைதான குடிநுழைவு குற்றவாளிகள். படம்: குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம்

