சிங்கப்பூரின் ஆகப் புதிய சாங்கி விமான நிலைய நான்காவது முனையம் சென்ற ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி முதல் செயல்படுகிறது. அது முதற்கொண்டு அந்த முனையம் 1.6 மில்லியனுக்கும் மேற்பட்ட பயணிகளைக் கையாண்டு இருக்கிறது. அங்கு 9,400க்கும் அதிக விமானச் சேவைகள் நடந்திருக்கின்றன. சாங்கி விமானநிலையக் குழுமம் நேற்று தன்னுடைய முதலாவது செயல்முறை விவர அறிக்கையில் இவற்றைத் தெரிவித்தது.
கம்போடியாவைச் சேர்ந்த ஜேசி (கம்போடியா) இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த ஆண்டில் நான்காவது முனையத்திற்குத் தன்னுடைய முதல் சேவையைத் தொடங்கியது. இப்போது முனையம் 3ல் செயல்படும் வியட்ஜெட் ஏர் நிறுவனம், மார்ச் 6 முதல் தன்னுடைய நடவடிக்கைகளை முனையம் நான்குக்கு மாற்றிக்கொள்ளும். இவற்றையும் சேர்த்து முனையம் 4ல் மொத்தம் 11 விமான நிறுவனங்கள் செயல்படும். அவை 21 வட்டார நகர்களுக்குச் சேவையாற்றும்.

