ஸ்கில்ஸ்ஃபியூச்சர் மோசடி: அமைப்பு எச்சரிக்கை

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் மோசடி: அமைப்பு எச்சரிக்கை

1 mins read
02816b44-7e21-4654-881c-0ce57129945e
-

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பணத்தைப் பயன்படுத்தி பயிற்சிகளில் சேரும்படி வீட்டுக்கு வீடு சென்று சிங்கப்பூரர்களை அணுகும் மோசடிப் பேர்வழிகள் பற்றி தனக்குத் தெரிய வந்திருப்பதாக ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு நேற்று குறிப்பிட்டது. இத்தகைய மோசடிப் பேர்வழிகள் சொல்வது எல்லாம் பொய் என்று ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று இந்த அமைப்பு விளக்கியது. ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பணத்தைப் பெறுவதற்குக் காலாவதி தேதி எதுவும் கிடையாது என்று இந்த அமைப்பு கூறியது.

பயிற்சி அளிப்பவர்கள் அனைவரும் கடுமையான சந்தைத்துறை வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருக்கும். ஸ்கில்ஸ்ஃபியூச்சர் உதவி பணத்தைத் தவறான வழியில் பயன்படுத்த முயல்வோருக்கு எதிராக இந்த அமைப்பு நடவடிக்கை எடுக்கத் தயங்காது. மோசடிக் காரியங்களைக் கடுமையான ஒன்றாக அமைப்பு கருதுகிறது. ஸ்கில்ஸ்ஃபியூச்சர் தொடர்பிலான சந்தேகத்திற்கு இடமான நடைமுறை பற்றி யாருக்காவது தெரிந்தால், அவர்கள் 6785 5785 என்ற எண் மூலம் அல்லது ssg.gov. sg/feedback என்ற இணைய முகவரி மூலம் இந்த அமைப்புடன் தொடர்பு கொள்ளலாம்.