பொருள் சேவை வரி மோசடி: முன்னாள் சுங்கத் துறை அதிகாரிக்கு 18 மாத சிறை

பொருள் சேவை வரி மோசடி: முன்னாள் சுங்கத் துறை அதிகாரிக்கு 18 மாத சிறை

1 mins read
7540740d-987d-49c2-9fee-cd0a3167fdfc
-

சிங்கப்பூரிலிருந்து புறப்படும் சுற்றுப்பயணிகள் தங்களின் பொருள் சேவை வரியைத் திரும்பப் பெறுவதற்காக சமர்ப்பிக்கும் ஆவணங்களை நிராகரித்து பிறகு அந்த விவரங்களை வைத்து அந்தப் பணத்தை தன் கணக்கில் போட்டுக்கொண்டு வந்த சுங்கத் துறை அதிகாரிக்கு 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. இணையம் மூலம் பதிவு செய்யப்படும் அந்த விவரங்களைக் கொண்டு தனது நான்கு கடன் அட்டைகளிலும் தனது நண்பரின் கடன் அட்டையிலும் பணத்தைப் போட்டுக்கொண்டார். போலியான தகவல்களை அளித்து அவர் அந்தப் பணத்தைப் பெற்றுள்ளார். 2011ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி முதல் 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை ஒன்பது தருணங்களில் இந்த மோசடியை அந்த அதிகாரி மேற்கொண்டுள்ளார். அவ்வாறு செய்த மோசடியால் 35 வயது லி சியாங்சிங் $52,441 பெற்றுள்ளார்.