விரைவுச்சாலையில் தீப்பற்றிய வாகனம்

விரைவுச்சாலையில் தீப்பற்றிய வாகனம்

1 mins read
0e84407e-985f-4f28-81b0-30153c6a962b
-
Google News Preferred Icon

மத்திய விரைவுச்சாலையின் சுரங்கப்பாதையில் நேற்று மாலை வாகனம் ஒன்று தீப்பற்றி எரிந்தது. ஆயர் ராஜா விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச்சாலையின் ஊட்ரம் சாலை வெளிவாயிலுக்கு முன்னர் அந்தத் தீச் சம்பவம் ஏற்பட்டதாக நேற்று மாலை 5.21 மணிக்கு நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. சாலையின் இரண்டாவது, மூன்றாவது தடங்களைத் தவிர்க்குமாறு வாகனமோட்டிகளை சுமார் 20 நிமிடத்திற்குப் பின் டுவிட்டர் மூலம் ஆணையம் கேட்டுகொண்டது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இச்சம்பவத்தால் ஆர்ச்சர்ட் சாலை வெளிவாயில் வரை மத்திய விரைவுச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக ஆணையம் கூறியுள்ளது.

வாகனத்தில் ஏற்பட்ட தீயை குடிமைத் தற்காப்புப் படையினர் அணைத்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்