2,772 டெங்கி சம்பவங்கள்: 16 ஆண்டுகளில் ஆகக் குறைவு

2,772 டெங்கி சம்பவங்கள்: 16 ஆண்டுகளில் ஆகக் குறைவு

1 mins read
6ae3624b-3999-40e9-8c9c-cd56e707deb0
-

சிங்கப்பூரில் சென்ற ஆண்டு 2,772 டெங்கி சம்பவங்கள் பதிவானது என்றும் இந்த எண்ணிக்கை 16 ஆண்டுகளில் ஆகக் குறைவாது என்றும் தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று வெளி யிட்டுள்ள அறிக்கையில் குறிப் பிட்டுள்ளது. குறைவான எண்ணிக்கை பதிவானதற்கு சாத்தியமுள்ள மூன்று காரணங்களை வாரியம் கூறியது. கடந்த சில ஆண்டுகளாக அதிக எண்ணிக்கையில் ஏற்பட்ட டெங்கி சம்பவங்களால் உள்ளூர் மக்களிடையே நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்துள்ளது முதல் காரணமாகக் கூறப்பட்டது.

2016ஆம் ஆண்டின் பிற்பாதியில் ஏற்பட்ட ஸிக்கா நோயால் சமூகமும் வாரியமும் ஒருமித்த முயற்சிகள் எடுத்ததை வாரியம் இரண்டாவது காரணமாகக் கூறியது. 'கிரெவிடிரேப்ஸ்' எனும் ஏடிஸ் கொசுக்களைப் பிடித்து அவற்றை கொண்டு தரவுகள் பெறப்படும். அதற்காக 50,000 கொசு வலை கள் தீவு முழுவதும் வைக்கப்பட் டுள்ளன. கொசுக்களைக் குறைக் கும் முயற்சியான இதை மூன்றா வது சாத்தியமுள்ள காரணமாக வாரியம் குறிப்பிட்டது.