நண்பர்களைத் தேடித் தந்த சமூகத் திட்டம்

நண்பர்களைத் தேடித் தந்த சமூகத் திட்டம்

1 mins read
1223e10c-99f3-4ed6-ae31-2dbd1dba7293
-
Google News Preferred Icon

முஹம்மது ஃபைரோஸ்

சமூகத்தில் உதவி தேவைப்படும் பிறருக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என விரும்புபவர் 66 வயது ரேணுகா தேவி ரெட்டி. அதன் அடிப்படையில், பல வழி களிலும் தொண்டூழியம் புரிந்து வரும் இவர், சமூகத்திற்குத் திருப்பிக் கொடுக்க விழைகிறார். இவருக்கு காமன்வெல்த் உட் பட தீவு முழுதும் பல வட்டாரங் களில் 'ஃபெய் யுவெ' சமூக சேவைகள் அமைப்பு நடத்திவரும் சமூக நட்புறவுத் திட்டத்தில் சேர்ந்து சேவைபுரிவது மறக்க முடியாத ஓர் அனுபவம். ஈராண்டுகளுக்கும் மேலாக காமன்வெல்த் வட்டாரத்தில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மூவறை வீட்டில் வசித்து வருகிறார் திருமதி ரேணுகா.

ஒருமுறை அவ்வட்டாரத்தில் உள்ள உணவங்காடி நிலையத் தில் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது 'ஃபெய் யுவெ' சமூக சேவைகள் அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் சிலர் அவரை அணுகி, சமூக நட்புறவுத் திட்டத்தைப் பற்றி விளக்கி அதில் சேருமாறு அழைப்பு விடுத்தனர். சற்றும் தயங்காமல் அவர்களுடைய அழைப்பை ஏற்றுக் கொண்டார் திருமதி ரேணுகா. "இத்திட்டம் எனது ஆர்வத் தைத் தூண்டுவதாக இருந்தது. மற்றவர்களுக்கு உதவும் மனப் பான்மை இருப்பதால் நான் இதில் சேர முடிவெடுத்தேன்," என்றார் அவர்.