சிங்போஸ்ட் நிறுவனத்தில் அஞ்சல் பட்டுவாடா ஊழியராக வேலை பார்த்த ஒருவர், பட்டுவாடா செய்யப்படாமல் திரும்பிய கடிதங்களைத் தூக்கி எறிந்துவிட்டார். அவரை நிறுவனம் வேலையிலிருந்து தூக்கி எறிந்துவிட்டது. அந்த ஊழியர் செய்த காரியத்தை ஒருவர் காணொளிப் படமாக எடுத்து அதை இணையத்தில் பதிவேற்றினார். இந்தச் சம்பவம் ஒரு கூட்டுரிமை அடுக்குமாடி வீட்டுத் தொகுதியில் இம்மாதம் 7ஆம் தேதி நிகழ்ந்ததாக சிங்போஸ்ட் பேச்சாளர் ஒருவர் கூறினார் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது. இந்தச் சம்பவம் பற்றி தனக்குத் தெரியப்படுத்தியவருக்கு சிங்போஸ்ட் நன்றி கூறியது.
சிங்போஸ்ட் ஊழியர் நீக்கம்
1 mins read

