தைப்பூச சம்பவத்துக்கு இணக்கத் தீர்வு ஏற்பட்டது

தைப்பூச சம்பவத்துக்கு இணக்கத் தீர்வு ஏற்பட்டது

1 mins read
Google News Preferred Icon

இந்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி தைப்பூச ஊர்வலத்தின் போது நிகழ்ந்த ஒரு சம்பவத்தில் ஈடுபட்டிருந்த குழுவைத் தான் சந்தித்ததாகவும் அந்தச் சம்பவத் திற்கு இணக்கமான தீர்வு காணப் பட்டதாகவும் இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்துள்ளது. அந்தச் சம்பவம் தொடர்பில் நேற்று வாரியம் ஓர் அறிக்கை வெளியிட்டது. சென்ற மாதம் 31ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஊர்வலத்தில் இடம் பெற்ற ஒரு காவடிக்காக பாட்டுப் பாடிச் சென்ற ஒரு குழுவினரை, வாரியத்தின் தொண்டூழியர்களும் போலிசாரும் தடுத்து நிறுத்தி அந்தக் குழுவினர் பயன்படுத்திய இசைக் கருவிகள், ஒலிபெருக்கி கள் பற்றி விளக்கம் கேட்டனர். ஒரு குறிப்பிட்ட இசைக்கருவி களைப் பயன்படுத்தவேண்டாம் என்று தொண்டூழியர்கள் அந்தக் குழுவினரைக் கேட்டுக்கொண்ட னர். அந்தக் குழுவினர் அதை மறுத்து கையில் இருந்த கஞ்சிரா வைக் காட்டிவிட்டு தொடர்ந்து ஊர்வலத்தில் சென்றுவிட்டனர். அந்தக் குழுவைச் சேர்ந்த ஒருவர் ஐந்து நாள் கழித்து ஒரு காணொளியைப் பதிவேற்றினார். அது, சமூக ஊடகத்தில் பல கருத்துகளைத் தூண்டிவிட்டது.