குறைந்த வருமானக் குடும்பங்கள் வாழ்க்கையில் உயர்நிலையை எட்டுவதற்காகத் தனிப்பட்ட ஆதரவுத் திட்டங்கள் அதிக அளவில் வகுக்கப்படும். இதன் கீழ் புதிய வேலை களையும் புதிய பொறுப்புகளையும் கண்டறிந்து ஏற்க உதவும் திறன் களைக் குறைந்த வருமானக் குடும்ப உறுப்பினர்கள் பெறு வதற்காக பல்வேறு திட்டங்களின் வழி அடுத்த ஐந்து ஆண்டுகளில் பத்து மில்லியன் வெள்ளி செல விடப்படும். அதிபர் ஹலிமா யாகோப், வாழ்வில் முன்னெடுத்துச் செல்லும் புதிய நிதித் திட்டத்தின் விவரங்களை நேற்று வெளியிட் டார்.
"வசதி குறைந்த குடும்பங் களின் வாழ்க்கைச் சூழலை மேம்படுவதற்காக அவர்களுக்குக் கைகொடுக்க விரும்புகிறோம்," என்று அதிபர் தமது உரையில் குறிப்பிட்டார். இந்த வகையில் அவர்கள் பின்னடைவிலிருந்து மீண்டு வரவும் காலத்திற்கு ஏற்ப பொருத்தமான திட்டத்தை மேற் கொள்ளவும் நிதியுதவி உதவும் என்றார் அவர். இவ்வாண்டின் அதிபர் சவால் அறப்பணி இயக்கத்தையும் நேற்றுத் தொடங்கி வைத்த திருவாட்டி ஹலிமா, தமது பொறுப்பின் கீழ் உள்ள ஆண்டு சமூகத் திட்டமும் நிதித் திரட்டு இயக்கமும் எளிதில் பாதிக்கக் கூடியவர்களை வாழ்க்கையில் தூக்கிவிடுவதில் அதிகம் கவனம் செலுத்தும் என்று குறிப்பிட்டார்.

