இணையப் பாதுகாப்பு: புதிய நிபுணத்துவத் திட்டம்

1 mins read

இணையப் பாதுகாப்பை வலுப் படுத்தும் வகையில் முழுநேர தேசிய சேவையாளர்களுக்காகப் புதிய குறுகிய கால இணைய நிபுணத்துவத் திட்டத்தை தற்காப்பு அமைச்சு வழங்க இருக்கிறது. இந்தத் திட்டம் இவ்வாண்டின் பிற்பகுதியில் தொடங்குகிறது. ஆண்டின் பிற்பகுதியில் தேசிய சேவையில் சேர இருப்போர் இந்தத் திட்டத்தில் இணைய விண்ணப்பம் செய்யலாம். நேற்றிலிருந்து விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படு வோர் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ராணுவத்தில் சேவையாற்றவேண்டும். முழுநேர தேசிய சேவை யாளராகக் குறைந்தபட்ச காலத் தை முடித்ததும் அவர்களுக்கு முழுநேரமாக ராணவத்தில் வேலை செய்வோருக்கான சம்பளம் கொடுக்கப்படும். சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தின் இணையப் பாதுகாப்பு பட்டப் படிப்பு வகுப்புக்கு அவர்கள் வாரம் ஒருமுறை செல்ல வேண்டும். அதே சமயத்தில் அவர்களுக்கு இணையத் தற்காப்பு பொறுப்புகளும் வழங்கப்படும்.

வழங்கப்படும் இணைய நிபுணத்துவ விருதுகளில் 50 லிருந்து 70 விருதுகள் திட்டத்தின் முதல் ஆண்டில் வழங்கப்படும். அதனை அடுத்து, முதல் ஆண்டுக்குப் பிறகு திட்டம் நிறைவுபெறும்போது 80லிருந்து 90 விருதுகள் வழங்கப்படும். இணையப் பாதுகாப்பில் நிபுணத்துவம் கொண்டவர்களை ஈர்ப்பதே விருதுகளின் இலக்கு. புதிய விருதுகள் புதிய இணைய முழுநேர தேசிய சேவை யாளர்கள் திட்டத்தின் கீழ் வருகிறது. மிரட்டல்கள் ஏற்படாதபடி கண் காணிப்புப் பணிகளில் ஈடு படுவது, பகுப்பாய்வு செய்வது போன்ற அடிப்படை பணிகளில் இணைய நடத்துனர்களாகச் செயல்படும் முழுநேர தேசிய சேவையாளர்களும் திட்டத்தின் ஒரு பகுதியாவர்.