மானபங்கம்: ஆடவர் மீது குற்றச்சாட்டு

மானபங்கம்: ஆடவர் மீது குற்றச்சாட்டு

1 mins read

பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த பெண்ணை மானபங்கம் செய்ததாக ஆடவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இம்மாதம் 10ஆம் தேதியன்று மாலை 5.50 மணி அளவில் புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் அவென்யூ 3 வழியாக எஸ்பிஎஸ் பேருந்து எண் 106ல் பயணம் செய்துகொண்டிருந்தபோது அந்த 27 வயது பெண்ணின் வலது கரத்தை கிளிஃப் ஹில்லரி செங் கியட் வாஸ் தொட்டதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, அந்தப் பெண் பேருந்து ஓட்டுநரிடம் உதவி நாடினார். வாஸ் பேருந்தில் தடுத்து வைக்கப்பட்டு பிறகு கைது செய்யப்பட்டார். இன்னொரு மானபங்க வழக்குடன் வாஸ் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. விசாரணைக்காக அவர் ஜூரோங் போலிஸ் பிரிவில் ஒரு வாரத்துக்கு தடுப்புக் காவலில் வைக்கப்படுகிறார்.