கடந்த மாதம் 22ஆம் தேதியன்று தாம் ஓட்டிச் சென்ற காரை துவாஸ் சோதனைச்சாவடியில் உள்ள மோட்டார் சைக்கிள்களுக்கான தடத்துக்குள் ஓட்டிச் சென்ற 49 வயது சிங்கப்பூர் ஆடவர், குடிபோதையில் கார் ஓட்டிய குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கடவுச்சீட்டை ஸ்கேன் செய்யும் இயந்திரம் மீது அவர் காரை மோதினார். அவரைச் சோதனை செய்த குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் அதிகாரிகள் அவர் மீது மதுபான வாடை வீசியதை உணர்ந்தனர். அந்த ஆடவர் போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த விபத்தில் யாரும் காயம் அடையவில்லை. இந்தச் செய்தியைக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் ஃபேஸ்புக்கில் நேற்று பகிர்ந்துகொண்டது.
துவாஸ் சோதனைச்சாவடியில் விபத்து: போதை ஓட்டுநர் கைது
1 mins read

