இளம் மாணவியுடன் பாலியல் உறவு கொண்டதாகக் குற்றச்சாட்டு

இளம் மாணவியுடன் பாலியல் உறவு கொண்டதாகக் குற்றச்சாட்டு

1 mins read

இளம் மாணவியுடன் பாலியல் உறவு கொண்டதன் பேரில் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் மீது 20 குற்றச்சாட்டுகள் பதிவாகி உள்ளன. 15 வயது மாணவியின் சம்மதத்துடன் அங் மோ கியோ வட்டாரத்தில் உள்ள ஒரு வீட்டில் அவருடன் அந்த ஆசிரியர் பாலியல் உறவு கொண்டதாகக் கூறப்படுகிறது. மாணவியின் அடையாளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் அந்த 39 வயது சிங்கப்பூரரின் பெயர் வெளியிடப்படவில்லை. 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மாணவியுடன் அந்த ஆடவர் பத்து முறை பாலியல் உறவு கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஆடவருக்கு $25,000க்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. அவரது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.