நிதியமைச்சர் ஹெங் சுவீ கியட் சிங்கப்பூரின் இந்த நிதியாண் டுக்கான வரவுசெலவுத் திட்ட அறிக் கையை இம்மாதம் 19ஆம் தேதி மாலை 3.30க்கு நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். சிங்கப்பூர் வரவுசெலவுத் திட்ட இணையப் பக்கத்தில் வரவு செலவுத் திட்ட அறிக்கை நேரடியா க ஒளிபரப்பாகும் என்று நிதி அமைச்சும் ரீச் எனப்படும் அரசாங்கத்தின் கருத் தறியும் பிரிவும் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன. நிதியமைச்சு சிங்கப்பூர் காது கேளாதோர் சங்கத்துடன் இணைந்து வரவுசெலவுத் திட்ட அறிக்கையை சைகை மொழியில் இணையத் தளத்தில் வழங்கும். மேலும், முக்கிய அறிவிப்புகள் நிதியமைச்சின் ஃபேஸ்புக் பக்கத் திலும் டுவிட்டர் பக்க்ததிலும் உடனுக்குடன் பதிவிடப்படும்.
பொதுமக்கள் #SGBudget2018 என்ற ஹாஷ்டாக்கைப் பயன்படுத்தி வரவுசெலவுத் திட்டம் தொடர்பான டுவீட்களையும் பதிவுகளையும் பார்வையிடலாம்.

