கை, கால், வாய்ப் புண் நோய்: முக்கிய கண்டுபிடிப்பு

கை, கால், வாய்ப் புண் நோய்: முக்கிய கண்டுபிடிப்பு

1 mins read
559f54ce-fe5c-4d2c-b117-fe60aa4e33f1
-

குழந்தைகளுக்குச் சாதாரணமாக ஏற்படும் கை, கால், வாய்ப் புண் நோய் அரிதாக சிலருக்கு மரணம் விளைவிக்கக்கூடிய மூளைத் தொற்றுக்கு வழிவகுத்துவிடும். இந்நிலை ஏற்படும்போது நோயாளியின் உடலில் உள்ள எதிர்ப்புசக்தி அந்த வைரஸை எதிர்கொண்டு போராடினால் மட்டுமே நோயி லிருந்து அவர் குணமடைய முடியும். இந்த நோய் மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக்கூடியது. இதில் 'என்டோவைரஸ் 71' என்ற கிருமி ஒருவரின் மத்திய நரம்பு மண்டலைத்தைத் தாக்கி, பாதிக்கிறது என்பதை சிங்கப்பூர் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள னர். இங்கு ஏற்படும் பல கை, கால், வாய்ப் புண் நோய் தொற் றுக்கு இது முக்கிய காரணமாக உள்ளது. மூளையைப் பாதிக்கக் கூடிய கிருமியும் இதுதான்.

இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள மருத்துவத்துறை நிபுணர்கள் (இடமிருந்து) இணை பேராசிரியர் சில்வி அலோன்சோ, டாக்டர் இசபெல் போன், முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ஐசக் டூ ஹோர்ங் கிட். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்