லோரோங் 7 தோ பாயோவில் உள்ள புளோக் 5ன் மின்தூக்கி முகப்பில் நேற்றுக் காலை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, பெண் ஒருவர் மருத் துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டார். காலை 8.25 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தைக் 'குறும்புச்செயலால் நிகழ்ந்த தீ விபத்து' என வகைப்படுத்தி போலிஸ் விசாரித்து வருகிறது. அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் எட்டாம் தளத்தில் உள்ள மின்தூக்கி முகப்பில் இந்தத் தீச்சம்பவம் நிகழ்ந்தது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து சென்ற சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, அப்புறப்படுத்தப்பட்ட பொருட்கள் தீப்பற்றி எரிந்ததைக் கண்டதாகவும் அழுத்தப்பட்ட காற்று நுரையைக் கொண்டு தீயை அணைத்த தாகவும் தெரிவித்தது.
தோ பாயோ: மின்தூக்கி முகப்பில் தீ
1 mins read
-

