$74,000 மதிப்புள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன

$74,000 மதிப்புள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன

2 mins read
4002e591-2619-427e-8bb3-005af6ec9c9f
-
Google News Preferred Icon

பாசிர் ரிஸ் டிரைவ் 3ல் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் இருந்த இருவர் கதவைத் திறக்க மறுத்ததால் மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். வீட்டின் அலமாரியில் ஒளிந்து கொண்டிருந்த 24 வயது பெண் ணையும் 29 வயது பெண்ணையும் கண்டனர். இருவரும் சிங்கப்பூரர் கள் என்று தெரிவிக்கப்பட்டது. 194 கிராம் 'ஹெராயின்', 154 கிராம் 'ஐஸ்', 101 'எக்ஸ்டசி' மாத்திரைகள், 22 'எரிமின்-5' மாத்திரைகளையும் இரு மின்னி லக்க எடை பார்க்கும் கருவிகளை யும் நான்கு அரிவாள்களையும் ஒரு தடியையும் அவர்கள் கைப்பற் றினர்.

திங்கட்கிழமை நடந்த சோத னையில் போதைப்பொருள் குற்ற வாளிகள் மொத்தம் ஐந்து பேரை அதிகாரிகள் கைது செய்தனர். $74,000க்கும் மேல் மதிப்புள்ள பலவகையான போதைப் பொருட் களையும் அதிகாரிகள் கைப்பற்றி னர். வீவக வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்கு முன்னர், அதிகாரி கள் பாசிர் ரிஸ் டிரைவ் 1ல் உள்ள பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தப் பட்ட வெள்ளை காரிலிருந்த 27 வயது ஆடவர் ஒருவரைக் கண் காணித்து வந்தனர்.

அவருடன் 28 வயது ஆடவரும் இருந்தார். மூன்றாவது சந்தேக நபர் மலேசியா வில் பதிவுசெய்யப்பட்ட மோட்டார் சைக்கிளில் காரை நோக்கி வந்த போது அதிகாரிகள் விரைந்தனர். காரில் 227 கிராம் 'ஹெராயின்', 253 கிராம் 'ஐஸ்' போதைப்பொரு ளைக் கண்டெடுத்தனர். மோட்டார் சைக்கிளில் 6 கிராம் 'ஹெராயின்', சிறிய அளவு 'ஐஸ்', போதைப் பொருள் சார்ந்த கருவி, $3,500 ரொக்கத்தை அதிகாரிகள் பறி முதல் செய்தனர்.

(மேல், இடது) பெண்கள் மறைந்திருந்த அலமாரி, கைது நடவடிக் கையில் சிக்கிய போதைப் பொருட்கள், ரொக்கம், ஆயுதங்கள். படங்கள்: மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு